வெயிற்காலம் தொடங்கி விட்டாலே போதும் வியர்வை அதிகமாக சுரக்கும். இதனால் பலர் சில நேரங்களில் அவஸ்தைப்படுவதுண்டு.
உடல் தோலின் அடிப்பகுதியில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகின்றன.
வியர்வையின் அளவு ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும்.
குறிப்பாக வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த வெப்பம் உடலைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக வியர்வை வெளியேற்றப்படும். அதனால்தான் இந்த வெயில்காலத்தில் நம்மை வியர்வை பாடாய்ப்படுத்துகிறது.
இதிலிருந்து எளிதில் விடுபட சில வழிமுறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வினிகர் இரண்டு டீஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பழ கலவையை கலந்து, உணவுக்கு முன் மூன்று வேளைகளிலும் உட்கொண்டு வந்தால், வியர்வை பிரச்சினையை முற்றிலுமாக தவிர்க்கலாம்.
- நாள்தோறும் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறு, அருந்தி வந்தாலும் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.
- பச்சையான உருளைக்கிழங்கு துண்டுகளை சாப்பிடலாம். சில துண்டுகளை வியர்வை அதிகம் ஏற்படும், கை மற்றும் முகத்தில் பூசுவதாலும், வியர்வை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.
- சிறிதளவு சூடத்தை, தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகரிக்கும் இடங்களில் தடவலாம்.
- எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து, அந்த கலவையை பயன்படுத்தி கைகளை நன்றாக மசாஜ் செய்து வந்தால், உள்ளங்கைகளில் ஏற்படும் வியர்வையை கட்டுபடுத்தலாம்.
- நாள்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தாலும், அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தலாம்.
- நாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் தூய்மையடைவதுடன், புத்துணர்ச்சி பெறுகிறது.