நாட்டில் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தலை நிச்சயம் வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது மே தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த சவாலை விடுத்திருக்கிறார்.
கடந்த வருடம் மிலேச்சத்தனமாக தீவிரவாத தாக்குதலினால் பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டதாக கூறிய அவர், தற்போது முழு உலகத்திற்கும் எதிர்பாரா தொற்று பரவி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றதாகவும் குறிப்பிட்டார்.
இத்தருணத்தில் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை நிச்சயம் நாம் வெற்றிகொள்வோம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.