கொரோனா நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த மருத்துவமனையில் 44 வயது கொரோனா நோயாளி ஏப்ரல் 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் மருத்துவர் பணிக்கு இணைந்ததாக கூறப்படுகிறது.
நோயாளி ஐ.சி.யு தனி அறையில் அனுதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை நோக்கி வந்த மருத்துவர்,ஆடைகளை விலக்கி தவறாக நடக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த நோயாளி, அலாரம் ஒலி எழுப்ப முற்பட்ட நிலையில், அதை தடுத்துள்ளார் மருத்துவர்.
குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் வெளியேறியப்பின் மருத்துவமனை ஊழியர்களிடம் 44 வயது கொரோனா நோயாளி சம்பவம் குறித்து விவரித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் பொலிசில் புகார் அளித்துள்ளது. மேலும், மருத்துவரை பணிநீக்கம் செய்துள்ளது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் நோயாளியுடன் நேரடி தொடர்பு கொள்ள முற்பட்டதால் இரண்டு வாரங்கள் தனிமைபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், வசிக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த மருத்துவர் மீது இயற்கைக்கு மாறாக நடந்து கொண்டது, நோயை பரப்ப முற்பட்டது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.