தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது.
44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கைத்தட்டிம் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது ஒரு பக்கம் இருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரை மாவட்டம் பைகாரா பகுதியில் டாஸ்டாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் அருகே கட்ட தொழிலாளியான சிவகுமரன் என்பவர் இன்று டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார்.
தந்தை மது அருந்திவிட்டு வந்ததை கண்ட மகள் அச்சனா மனமுடைந்து தீக்குளித்தார். மகள் அச்சனாவை காப்பாற்றச் சென்ற தாய் பரமேஸ்வரியும் தீயில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதையடுத்து, கோவையில் தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வடவள்ளியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டிய நிலையில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதேபோல திருப்பூர் கல்லூரி சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் சென்றவர்களை திடீரென தாக்கினார்.
இதை அடுத்து, பொதுமக்கள் சேர்ந்து போதை இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் இளைஞரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.