இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 87 ஆயிரத்து 961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 99 ஆயிரத்து 23 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு மேலும் புதிதாக 243 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் அமெரிக்கா (77,559 பேர்), இங்கிலாந்து (31,241 பேர்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி (30,201 பேர்) மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.