திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானைகளின் தொல்லையினால் அப்பகுதியை சுற்றி யானை மின்வேலி பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் திருகோணமலை-வில்கம் விகாரை பாடசாலையில் 03ம் தரத்தில் கல்வி பயிலும் 10ம் கட்டை பகுதியைச் சேர்ந்த கவிஷ்க தெனித் சஞ்ஜீவ என தெரியவருகின்றது.
குறித்த சிறுவன் யானை மின்வேலியில் மோதியதையடுத்து 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சிறுவனின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.