பிரான்ஸ் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், நேற்று மட்டுமே 263 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இரண்டு மாத ஊரடங்குக்குப் பின் முதல் கட்டமாக கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்ட நிலையிலேயே, திடீரென கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26,643 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 70 பேர் கொரோனாவுக்கு பலியானதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
மார்ச் 17 அன்று ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதற்குப் பின் இதுதான் குறைவான இறப்பு எண்ணிக்கை ஆகும்.
என்றாலும், மருத்துவமனைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெளியிடப்படுவதில் தாமதம் இருப்பதால் பொதுவாகவே வார இறுதி எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.
பிரான்ஸ் திங்கள் முதல் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தத் தொடங்கியது. இருந்தாலும் பல கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தொடர்ந்து அமுலில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.