கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய சிகிச்சை பெற்றுவந்த மேலும் 63 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நேற்றுவரை 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 445 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 461 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.