இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்கள் பெயரில் இணைய பக்கம் வழியாக ஆபாச சேட் செய்து பல லட்சங்கள் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புறம் பகுதியில் குடியிருக்கும் 26 வயது அப்துல் சமத் என்ற இளைஞரையே மோசடி தொடர்பில் பொலிசார் கைதனர்.
சமூக வலைதளம் வழியாக இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியே ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
2018 டிசம்பர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை இதுபோன்ற மோசடியால் அப்துல் சமத் சுமார் 19 லட்சம் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தமது வலையில் சிக்கும் நபர்களுக்கு தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வதாக கூறி அவர்களிடம் இருந்து அதிக பணம் வசூலித்துள்ளார்.
வீடியோ அழைப்புக்கு தனிக்கட்டணம், நிர்வாண வீடியோவுக்கு தனிக்கட்டணம் என இவர் வசூலித்துள்ளார்.
இவரது வங்கிக் கணக்கில் நம்பி பணம் அனுப்பும் நபர்களை பொய்யான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பி ஏமாற்றியுள்ளார்.
வீடியோ அழைப்பில் ஆபாசமாக பேச 2000 ரூபாய் வரை இவர் கட்டணமாக வசூலித்து ஏமாற்றியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், தற்போது கைது செய்துள்ளனர்.