இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர விபத்து உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடந்துள்ளது.
அவுரேயா மாவட்டத்தின் Mihauli பகுதியில், சுமார் 50 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ராஜஸ்தானிலிருந்து வந்து கொண்டிருந்த லொறி. டெல்லியில் இருந்து வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 24 பேர் பலியாகினர், 22 பேர் மருத்துவமனயைில அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த காயமடைந்த 15 பேர் சைஃபாய் பிஜிஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவுரியாவின் தலைமை மருத்துவ அதிகாரி அர்ச்சனா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலோர் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவுரியாவின் மாவட்ட நீதவான் அபிஷேக் சிங் மேற்கோளிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
The site where 24 migrant labourers died and many got injured after a collision between two trucks in UP's Auraiya. pic.twitter.com/R2z2mf58va
— NDTV (@ndtv) May 16, 2020
இந்தியாவில் மார்ச் 24 அன்று முதல் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
Heartbreaking visuals from the accident in #Auraiya, UP.
When did it become such a big crime to be a migrant worker? What happened in Auraiya is not the first, but will it be the last?pic.twitter.com/lBTFkElbfG
— Ruchira Chaturvedi (@RuchiraC) May 16, 2020
ஊரடங்கால் வீட்டிலிருந்து வெகு தொலைவில் வாழும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைகள் அல்லது ஊதியம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.