தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஐரோப்பாவில் ஊரடங்கை பல நாடுகளும் தளர்த்தி வருகின்றன. கிரீஸ் நாட்டில் கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளன.
கம்போடியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கடைசி பொதுமகனும் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.
சிங்கப்பூரில் 683 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 38ஆக அதிகரித்துள்ளது.
மலேசியாவில் 24 மணித்தியாலங்களில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 894ஆக உயர்ந்துள்ளது