கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் சேவைகளை வழங்கும் பிற தொழில்முனைவோர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் சுற்றுலா ஹோட்டல்களை மீண்டும் திறப்பதற்கு இதன்போது ஒப்புக்கொண்டனர்.
இதன்போது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை மீள திறக்க உலக சுகாதார ஸ்தாபனம் முன்னதாகவே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் கீழ் ஹோட்டல் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க ஒரு திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றும், உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.