‘புதிய வாழ்க்கை முறைக்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் சமிக்கைகள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக ஆலோசனைக்குழு இன்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கூடியது. இதன் போதே குறித்த தொடர் சமிக்கைகள் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,
வைத்திய நிர்வாகிககள் , நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் 35 பேரை உள்ளடக்கிய இந்த ஆலோசனைக் குழு இரு தினங்களுக்கு ஒரு தடவை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கூடும்.
‘புதிய வாழ்க்கை முறைக்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் சமிக்கைகள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பொது மக்கள் கூடும் இடங்கள் , பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பற்றில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டை வழமைக்கு கொண்டு வரும் அதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசங்களைப் பயன்படுத்துதல், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய பொது ஸ்தானங்களுக்கு கிருமிநாசினி தெளித்தல் , பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உபகரணங்களை தடையின்றி பெற்றுக் கொள்ளல் என்பன பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீன முனசிங்க, மேலதிக செயலாளர்களான லக்ஷ்மன் சோமதுங்க, ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.