முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தனியார் சிங்கள வானொலி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும், அதேபோல அறிவிப்பாளராகவும் செயலாற்றி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது இந்த செயல் சமூக ஊடகங்களில் இந்த காணொளியும், குரல் பதிவுகளும் தற்போது வைரலாகப் பரவிவருகின்றது.
கொழும்பிலுள்ள தனியார் வானொலியில் இன்று காலை செய்தி வாசிப்பாளர் ஆசனத்தில் அமர்ந்து செய்திகளை வாசித்த மைத்திரி, அதன் பின்னர் அறிப்பாளராகவும் வானொலியும் நானும் என்கிற தலைப்பில் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.
அண்மைக்காலமாக மைத்திரி மீது கடும் அதிருப்திகளும், கண்டனங்களும் சமூக ஊடகங்களில் வலுத்துவந்த நிலையில், இன்றுகாலை முதல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குறித்த சிறந்த விடயங்களே அவற்றில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.