மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இரவு இடம்பெற்றுள்ளது.
தற்கொலைக்கான காரணம் வீட்டாருடன் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘ஜீவிதா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுவார்.
இதனால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்’ என்றனர். என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.