நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் சுகாதார பராமரிப்புக்கு தேவையான உபகரணங்கள் எதிர்காலத்தில் வாங்கப்படும் என்றும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இன்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலைகள் திறக்கப்படுவது பல கட்டங்களில் நடைபெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


















