இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் உயிரிழந்ததையடுத்து, சீமான் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான். இவருக்கு தற்போது 56 வயதாகிறது.
இந்நிலையில் தலங்கம வைத்தியசாலையில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான், தற்போது தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Og2tHaYeED
— சீமான் (@SeemanOfficial) May 26, 2020
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.