மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர் என்றும் கூறிய அங்கஜன் இராமநாதன் ,தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் என்னுடன் சேர்ந்து யாழ் மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும் மலையக வாழ் யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கான பல உதவி திட்டங்களையும் செய்தார் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த பெப்ரவரி 21ம் யாழ் வருகை தந்தபோதும் தெல்லிப்பளை பிரதேச செயலக பகுதியில் வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். யாழ் மக்களுக்காக வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து தருவதாக உறுதியளித்தார். அவரது பிரிவு என்னால் இன்னும் ஈடுஇணை செய்யமுடியாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்..