விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை ஜீலை 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் சீரற்ற சமூக நிலையில் நவீனமயமாக்கல் திட்டத்திற்கான விண்ணப்பங்களை உரிய திகதியில் அனுப்பமுடியாது போயிருந்தமையால் அதன் காலத்தை நீடிக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி, கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்களிடம் முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் கேட்டிருந்தார்.
அந்த வேண்டுகோளிற்கு இணங்க இந்த கால நீடிப்பு தற்போது விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளதாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.