அமெரிக்காவில் பொலிஸ் காவலில் கருப்பினத்தவர் இறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
வட அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் அவ்வப்போது வன்முறை எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது போன்று,
பெரிய பொது பேரணிகளுக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் தடை விதித்திருந்தபோதும், சூரிச் நகரில் திங்களன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், கருப்பினத்தவரின் உயிருக்கும் மதிப்புண்டு, அமைதி காப்பதே வன்முறைதான் மற்றும் பொலிசாரின் வன்முறையை ஒடுக்குக உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
ஒரு வாரத்திற்கு முன்னர் மினியாபொலிஸ் நகரில் 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவர் பொலிசாரால் சாகடிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சூரிச் நகரில் சுமார் 2,000 பேர் வரை திரண்டுள்ளதாக சமூக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அனுமதி அளித்த பொலிசார், பல நூறு எண்ணிக்கை என்று முடித்துக் கொண்டுள்ளனர்.
நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கடந்து சென்ற இந்த பேரணி மிக அமைதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்களை கடும் போக்குடன் எதிர்கொண்டதாக பொலிசார் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.