நைஜீரியாவை சேர்ந்த மிக பெரும் கோடீஸ்வரரை மணந்த இளம்பெண் கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு லண்டனில் பிரம்மாண்ட வீட்டை கணவர் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.
நைஜீரியாவை சேர்ந்தவர் Ned Nwoko (59). மிகப்பெரும் கோடீஸ்வரரான இவரின் சொத்து மதிப்பு $1.2 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளம்பெண்ணும், நடிகையுமான Regina Daniels (19) என்பவரை கடந்தாண்டு Ned திருமணம் செய்து கொண்டார்.
அதிக வயது வித்தியாசம் கொண்ட இருவரும் திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சங்களை கிளப்பியது, இது குறித்து இருவரும் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் Regina தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இதை அவரும், Ned சேர்ந்தே அறிவித்துள்ளனர், இதையடுத்து மனைவிக்கு ஆச்சரிய பரிசாக லண்டனில் பெரிய வீட்டை வாங்கி Ned கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார், குழந்தை பிறந்த பின்னர் Regina அங்கு வசிக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
இதனிடையில் முதல்முறையாக தன்னை விட 40 வயது அதிகமான Ned-ஐ ஏன் திருமணம் செய்து கொண்டேன் என Ned கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் என் வயதுடைய நபர் யாரைவாவது திருமணம் செய்து கொண்டிருப்பேன் என நினைக்கவில்லை. ஏனென்றால் நான் மிகவும் பிடிவாதமானவள், ஆனால் என் கணவனுடன் நான் அப்படி இல்லை, அவரை மிகவும் மதிக்கிறேன் என கூறியுள்ளார்.