மட்டக்களப்பு – ஆரையம்பதியில் திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கோயில்குளம் பகுதியில் இடம்பெற்ற திருமண வீடொன்றில் நேற்றிரவு சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி கலந்த புரியாணியை உட்கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சுகாராதாரப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இன்று காலையும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பாகவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.