கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட சுமார் 4.5 அடி உயரம் கொண்ட 09 கஞ்சா செடிகள் கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகரை அண்மித்த ஆனந்த புரம் பகுதியில் மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று (04-06-2020) சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது மிகவும் சூட்சுமமான முறையில் வீட்டுவளவில் வளர்க்கப்பட்ட சுமார் 4.5 அடி உயரம் கொண்ட 09 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த செடிகளை வளர்த்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கிளிநொச்சிப் பொலிசாரால் கைது செய்யதுள்ளனர்.



















