தமிழரசு கட்சின் வேட்பாளர்கள் அமைச்சராவதற்காக கட்சியின் விதிமுறைகளை மீறி பல கோடிகள் வழங்கியதற்கு பரிசாக வழங்கப்பட்டது தான் சாணக்கியா ராகுல் ராஜபுத்திரனிற்கு வேட்பாளர் நியமனம்
இது கட்சி கொள்கைகளுக்கு முரன் இல்லையா என மக்கள் கேட்கிறார்கள்…..
இதுக்குத்தான், தீர்க்க தரிசி அன்றே சொன்னார் , தம்பி சாணக்கியா பட்டிருப்பில் பாராளுமன்றம் போவது கடினம் அதை விட மாகாண சபையில் தனக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் டெலோ ஜனாவுக்கு ஆதரவை வழங்கு …
காரணம் 2015 வரை மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றவர்களின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராகவும் இருந்தவரே சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன்.
அதற்கான ஆதாரம் கீழே தொங்குது….
இவர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்தாம் இலக்க வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.


அப்படி ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் நிச்சயம் நீர் மாகண சபைக்கும், ஜனா பாராளுமன்றமும் போகலாம், என்று இப்போ பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுவின் சார்பில் நின்று.. மீண்டும் மாகாண சபைக்கும் நிற்க முடியாது,
அத்துடன் அண்மையில் திருகோணமலையில் இடம் பெற்ற சந்திப்பில் சுமந்திரன் கூறியுள்ளார் சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன் அமைச்சராகலாம் என கூறியுள்ளார்.
அதனடிப்படையில் கொரோனா காலத்தில் மாவட்டம் விட்டு யாரும் செல்ல முடியாத நிலையில் கண்டிக்கு மூன்று தடவை கண்டிக்கு சென்று திரும்பியுள்ளார்.
இதற்கு யார் அனுமதி கொடுக்க முடியும் இப்படி சென்று வர இவர் என்ன அமைச்சரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



















