உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதா அமைச்சுக்கு 230 மில்லியன் டொலர் நிவாரண நிதி வழங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது.
கொவிட்- 19 வைரஸ் ஒழிப்புக்கு உலக சுகாதார ஸ்தாபனம் 1.9 மில்லியன் அமெரிக்க டொலரினை இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபன காரியாலயத்திற்கு வழங்கியுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இதற்கமைய, 1.9 அமெரிக்க டொலர் நிவாரண நிதி உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கை காரியாலயம் ஊடாகவும், மிகுதி 1,468000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி இந்நியாவின் சியரோ நிறுவன காரியாலயம் ஊடாக கிடைக்கப் பெற்றது.
இந்த நிவாரண நிதியத்தில் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 855,869 அமெரிக்க டொலர் உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கை காரியாலயம் ஊடாக செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவுகள் எவையும் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவில்லை.
இரசாயன பரிசோதனையினை முன்னேற்றகரமாக முன்னெடுக்கும் நோக்கில் அத்தியாவசிய மருத்தவ உபகரண கொள்வனவுக்கான 686,716 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளன. நோய் தடுப்பு , பாதுகாப்ப நடவடிக்கைகளுக்காக 79,915 அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டுள்ளன.
கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும், விளிப்புணர்வூட்டும் நடடிக்கைகளுக்காக 89,238 அமெரிக்க டொலரும், செலவுசெய்யப்பட்டுள்ளன.
கிடைக்கப் பெற்ற நிதியத்தில் மிகுதியாக உள்ள 1,078,915 அமெரிக்க டொலர் கொவிட்- 19 வைரஸ் ஒழிப்புக்கு வழங்குவதாக உலக சுகாதர ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 2021 டிசெம்பர் மாதம் வரையில் இலங்கை முன்னெடுக்கும் சுகாதார நவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக யூரோ மில்லியன் 02 அதாவது 2.27 மில்லியன் அமெரிக்க டொலரை தம்வசம் வைத்துக் கொள்வதாக உலக சுகாதா ஸ்தாபனம் அறிவித்துள்ளது.