மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஹெரோயின் போதை பொருள் தம்வசம் வைத்திருந்த 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 69 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிகாவல்துறை மா அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.