ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றால் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செய்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டை கட்டியெழுப்பும் நோக்கிலேயே ஜனாதிபதிக்கு ஆதரவளித்து செயற்பட எதிர்பார்ப்பதாக ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் காரணங்களுக்காக நாட்டின் எதிர்காலத்தை ஜனாதிபதி குப்பைத் தொட்டியில் போடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தொழில் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய 90 வீதமானவர்களுக்கு தொழிலும் இல்லை சம்பளமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் அவர்கள் பெற்ற வங்கி கடன்களையும், கடனட்டை கொடுப்பனவுகளையும் அறவிடுமாறு வங்கிகளால் பணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே இவ்வாறான நிலைமைகளை கையாள அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு என்ன எனவும் ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.