ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி வரும் ஞாயிறு கிழமை மிருகஷீடம், திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க முடியும். நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழப்போகும் இந்த நாளில் ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை,சுவாதி, அவிட்டம், சதயம்
நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூன் 23ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 2019ஆம் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் கூடியிருந்த போது நிகழ்ந்த கேது கிரகஸ்த சூரிய கிரகணம் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருந்தது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் 3 மணிநேரம் வரை நீடித்தது. வரும் ஞாயிறு கிழமை நிகழப்போகும் சூரிய கிரகணம் ஆறு மணிநேரம் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணம் காலை 9:15:58 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 12:10 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பிற்பகல் 3:04 மணிக்கு உச்சத்தை அடைகிறது.
இந்த சூரிய கிரகணம் செவ்வாய், ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரங்களில் நிகழ்வதால் திருவாதிரை, சுவாதி, சதயம், ஆகிய ராகுவின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், மிருகஷீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய செவ்வாயின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், ரோகிணி, புனர்பூசம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.
- கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி நமசிவாய என்கிற மந்திரத்தை கிரகணம் முடியும் வரையில் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் சமைக்காத உணவுப் பொருட்களின் மீது தர்ப்பை புல்லை போட வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது. கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது உத்தமம். சிறிய அளவில் நாக பிரதிஷ்டை செய்து அதற்கு அபிஷேகம் பூஜை செய்ய வேண்டும் என்று குறிக்கப்படுகிறது. இதனால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாகும்.
- சிவ பூஜை செய்பவர்களும் இத்தருணத்தில் பூஜை செய்வது நல்லது. சிவபூஜை செய்பவர்கள் அதிகாலையில் தாங்கள் சிவ பூஜை செய்திருந்தால் கூட மறுபடியும் சூரிய கிரகணத்தின் பொழுது சிவ பூஜை செய்ய வேண்டும்.
- அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பிராமணர்களை கொண்டு சாந்தி செய்து கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு வீட்டை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.