ஸ்ரீலங்காவுக்கு அருகிலுள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் எந்த ஒரு காரணத்திற்காகவும் சட்டவிரோதமாக ஸ்ரீலங்கா கடல் எல்லையை மீறி வர வேண்டாம் என அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு அருகில் உள்ள நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கடல் வழியாக தப்பி வருவதற்கு பலர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியது.
இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையம் ஊடாக தெளிவுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வடக்கு பிரதேசங்கள் பலவற்றில் கடற்படையினர் பாதுகாப்பினை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குள் எவ்வித சட்டவிரோத குடியேறிகளும் நுழையாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அறிவிப்பை கண்டுக்கொள்ளாமல் இலங்கை கடல் எல்லையை தாண்டி வருபவர்களை சர்வதேச கடல் எல்லைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.