“கழுகு பார்வை” என்ற முகநூல் ஊடாக கருத்திட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, மன்னார் நீதவான் மா.கணேசராஜா நாளை வரை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார்.
சட்டத்தரணி பா.டெனிஸ்வரனின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் தனியார் வாடகை வாக உரிமையாளர் சங்கத்தினரால் தங்களுக்கு வாகனத்தரிப்பிடம் ஒன்று வேண்டுமென்று மன்னார் நகரசபைல் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் குறித்த வழக்கு இணக்கமாக தீர்க்கப்பட்டு கைவாங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் வழக்கு நிலுவையில் இருந்த காலப்பகுதியில் மேற்படி போலி முகநூல் ஊடாகவும், இன்னும் ஒருசில முகநூல் ஊடாகவும் கருத்து வெளியிடப்பட்டது.
இதற்கு எதிராக பா.டெனிஸ்வரன் மன்னார் பொலிசாரிடம் முறையிட்டார். இதையடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதானவரின் தெலைபேசி ஊடாகவே கணக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் கழுகு பாரவையை இயக்கியது வேறு ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.