திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (19) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்தவர், திருகோணமலை கிறீன் வீதி இலக்கம் 133/59 வசித்து வரும் பத்மராசா (வயது – 44) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, 40 ஆயிரம் ரூபா கடன் பெற்றிருந்தார் எனவும், அப்பணத்தைச் செலுத்துவதற்கு உறவினர்கள் உதவியிருந்த நிலையில் அவர் கவலை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்