கொரோனா மருத்துவ பரிசோதனையின் போது அணியும் முழு கவச உடையுடன் செவிலியர் ஒருவர் லிப்டிற்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள கலசமேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவர் தான் வேலை செய்யும் தளத்திலிருந்து வேறொரு தளத்தில் வேறு தளத்திற்கு செல்வதற்கு லிப்டில் சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென்று மின்சாரம் தடைபட்டதால், லிப்டில் இருந்து காப்பாற்றுவதற்கு, அவர் அழைத்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து காற்று,வெளிச்சம் இல்லாததால் அவர் உள்ளேயே மயக்கமடைந்து கிடந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பின் அவர் லிப்டுக்குள் கிடந்ததை பார்த்த சிலர் அவரை காப்பாற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நர்ஸ் கூறுகையில், ” நான் லிப்ட் உள்ளே செல்லும்போது மின்சாரம் தடைபட்டது. அவசர உதவி வேண்டி அங்கிருந்த அலாரத்தை அரைமணி நேரத்துக்கு மேல் அடித்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. காற்று இல்லாததால் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தது. தொடர்ந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
முழுகவச உடையணிந்து மருத்துவர்கள் செவிலியர்கள் படும் அவஸ்தையைக் கருத்தில் கொண்டு மக்கள் கவனமாக இருந்தால் கொரோனாவிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.




















