ஆனையிறவில் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொன்றதாக கருணா தெரிவித்த கருத்திற்கு மகிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்
கருணாவின் கூற்றினால் அமைதிக்கு அச்சுறுத்தல் என்றால் சட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருணா தெரிவித்துள்ளதை அரசியலிற்கு அப்பால் கண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ள ரம்புக்வெல எங்கள் யுத்தவீரர்களின் வெற்றியை பலவீனப்படுத்தும் அறிக்கையை யார் வெளியிட்டாலும் அதனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அமைதி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் உரிய அதிகாரிகள் நடவடிக்கையை எடுக்கவேண்டும்,இதற்கு எந்த எதிர்ப்பும் வெளியாகாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.