யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் நேற்றுப் 132 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, நேற்றைய பரிசோதனையில் இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 57 பேர், முல்லைத்தீவு இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 43 பேர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 30 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.