ஓன்றுமே புரியவில்லை உலகத்திலை.. உண்மையில் ஓர் கட்சியில் விசுவாசம் உள்ளவர் தனது கட்சியை நியாயப்படுத்துவார், கட்சி கொள்கையை நியாயப்படுத்துவார், தான் செய்தவற்றை மக்களிற்கு கூறுவார். இது தான் தேர்தல் பிரச்சாரத்திற்கான வேலை திட்டம்.
திடீரென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பாப்பா எதற்காக சுமந்திரனை நியாயப்படுத்துகிறார் என்ற கேள்வி மக்களிடையே எழுத்துள்ளது?
சிறிதரன் பாப்பா “நக்குண்டார் நாவிளந்தாரா?” கொழும்பில் சாப்பாட்டு கடை உணவிற்கு மேலாக சுமந்திரன் வீட்டு உணவு ருசியாக உள்ளதா? “ஓன்றுமே புரியவில்லை உலகத்திலை!”
சிறிதரன் பாப்பா சொல்லும் கற்பனை கதைகள் யாவும், சிறிதரன் பாப்பாவின் கடந்த கால அரசியல் வாழ்க்கையை கேள்வி கூறி ஆக்கி உள்ளது.
சுமந்திரன் நியாயப்படுத்துவதற்காக, சிறிதரன் பாப்பா எதற்காக எமது தேசியத்தலைவர் பிரபாகரன் கூறியதாக கற்பனை கதைகளை கூற வேண்டும்?
தமிழீழ விடுதலை புலிகளிற்கு ஓர் கொள்கை உண்டு. இந்த கொள்கையிலிருந்து அவர்கள் அணுவும் நகர மாட்டார்கள். சுமந்திரனை நியாயப்படுத்துவதற்காக, சிறிதரன் பாப்பா ஏதற்காக தேசிய தலைவர், நீலன் திருச்செல்வம் பற்றி கூறியதாக படு பொய் கூற வேண்டும்?
நீலன் திருச்செல்வம் பற்றி எமது தேசியத்தலைவர் பிரபாகரன் கூறியதாக கூறும் கதையை, முடியுமானால் சிறிதரன் பாப்பாவால் நிருபிக்க முடியுமா? சிறிதரன் பாப்பாவிற்கு ஏன் இந்த வம்பு?
வேறு ஒரு கன்னி வக்கீல் கூறுகிறார், மதிய உணவின் பின்னர் கும்பகர்ணன் படலம் வாசிக்கும் ஒருவரை, தேசிய தலைவர் சர்வதேச அரசியல் செய்ய பணித்ததாக! இது ஓரு குசும்பு. விடயம் புரியாவிடில் வாயை மூடுவது நல்லது.
இது உண்மையானால், விடுதலை புலிகளினால் வரையப்பட்ட இடைகால தீர்வு திட்ட வரைவிற்கு, இவரை பங்கு கொள்ளுமாறு ஏன் விடுதலை புலிகள் அழைக்கவில்லை என்பதை, தேசிய தலைவரின் பெயரை விற்று அரசியல் செய்பவர்கள் பதில் கூற வேண்டும்.
ஆங்கிலம் பேசுபவர்கள் எல்லராலும், சர்வதேச அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த கன்னி வக்கீல் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலை புலிகளிற்கு அறிவாளிகள் கல்விமான்கள் போன்றோர் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள் என்பதே உண்மை. இது பற்றி தேர்தல் பிரச்சாரங்களில் குசும்ப வேண்டாம்.
இன்னுமொரு அறப்படித்த வக்கீல் கூறுகிறார், மூவாயிரம் இராணுவத்தின் சர்ச்சைக்கு, கருணாவிற்கு விசாரணைக்குழு வைக்குமாறு. இந்த வங்குறோட்டு கட்சியில் உள்ள வக்கீல்கள், வங்குறோட்டு அரசியல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இதன் தலைமையே முழு பேய்காட்டு மனிதன் தானே.
ஏதிர்வரும் தேர்தலில் தனது வெற்றியே தள்ளாடும் கட்டத்தில் உள்ள சிறிதரன் பாப்பா ஏன் மோசடிகள் நிறைந்த M.A.சுமந்திரனை நியாயப்படுத்த வேண்டும்? அப்படியானால் சிறிதரன் பாப்பா ஏதோ மோசடியில் முறையாக அகப்பட்டு சுமந்திரனிடம் தஞ்சம் புகுந்துள்ளார் போலும்.
தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயரை தமது சுயநலத்திற்காக விற்க ஆரம்பித்துள்ள சிறிதரன் பாப்பா, கால போக்கில், தேசியத்தலைவர் பிரபாகரன், முன்பு ஒரு நாள் கூறினார், “சுமந்திரன் என்பவர் தான் தமிழீழ மக்களை எதிர்காலத்தில் வழி நடத்துவாரென கூறுவார் போல் உள்ளது”. சிறிதரன் பாப்பா உங்களிற்கு ஏன் இந்த வம்பு.
கல்விமான்கள் அறிவாளிகள் பற்றி, சுமந்திரனிற்காக விற்காக சிறிதரன் பாப்பா எங்களிற்கு வகுப்பு நடந்தும் முன், ஒரு இனத்தை விற்று வாழ்பவர்கள் கல்விமான் அறிவாளிகளா என்பதை சிந்திக்க வேண்டும். ?
சிறிதரன் பாப்பா, நீங்கள் உலக சரித்திரத்தை அறியாதவர் போல் உள்ளதே! ஊதரணத்திற்கு, தமிழ்நாட்டில் காமராஜர், எம்.ஜீ.ராமச்சந்திரன் போன்றவர்கள் கல்விமான்களா? இவர்கள் மக்களிற்கு செய்த சேவையை பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?
இதேவேளை, கல்விமான்களாக உள்ள சுப்பிரமணிய சுவாமி தமிழ்நாட்டு மக்களிற்கும் தமிழீன மக்களிற்கு செய்யும் அநியாயங்கள் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஏன் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா ஒர் கல்விமான? இவர் அன்று சிங்களதேசத்திற்கு போட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே இன்று ஈழத்தமிழர்களாகிய நாம் அழித்துகொண்டு போகிறோம் என்பதை நீங்கள் ஒரு பொழுதும் அறியவில்லையா?
ஒரு தேசம், இனம், மக்கள் வளருவதற்கு காறை கொண் இனத்ததை விற்று வாழும் கல்விமான்கள் தேவை என்பதை நீங்கள் எந்த பாடபுத்தகத்தில் கற்றீர்கள்?
சிறிதரன் பாப்பா, ஓர் தேசம் இனம் மக்கள் வளருவதற்கு காப்பாற்றப்படுவதற்கும், மக்கள் இனம் சார்ந்த நல்ல சிந்தனையாளர் அர்ப்பணிப்பாளர் பேரம் வீரம் பேசும் தன்மை கொண்ட ஒர் தேசியவாதியே இன்று தத்தளிக்கு ஈழத்தமிழ் மக்களிற்கு தேவை என்பதை சிறிதரன் பாப்பா நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
சுமந்திரன் ஒரு தடவையா இரு தடவையா எத்தனை தடவை தமிழீழ மக்களை விற்று தன்னை ஒரு நியாயவதியாக, நியாயம் அறவே தெரியதா சிங்கள அரசியல் தலைவர்களிடம் செல்வாக்காக வாழ்கிறார் என்பதை இன்னும் நீங்கள் புரியவில்லை என்பது நாம் செய்த பெரும் துர்பாக்கியம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் ஏன் கட்சியிலிருந்து விலகுவதற்கான நிலை உருவானது என்பதை நீங்கள் என்றாவது ஆராய்ந்ததுண்டா? வழங்கறிஞர்களான தவராசா, ரேலோ சிறிஸ்காந்தராசா கல்விமான் சிறிநேசன் ஆகியோர், உங்கள் திடீர் நண்பன் சுமந்திரன் போன்று இனத்தை விற்று வாழ்கிறார்களா?
சுமந்திரன் உங்கள் கண்ணிற்கு கல்விமானகவும் அறிவாளியாக உள்ளது சிரிப்பாகவுள்ளது.
சிறிதரன் பாப்பா, நீங்கள் கூறவது உண்மையாக இருந்தால், இன்று வரை எத்தனை தமிழ் கல்விமான்களையும் அறிவாளிகளையும் சுமந்திரனகவும் நீங்களும் தமிழரசுகட்சியிலோ தமிழ் தேசிய கூட்டமைப்பிலோ இணைத்துள்ளீர்கள், இணைக்க முன் வந்துள்ளீர்கள்?
கல்விமானிற்கும் அறிவாளிக்குமான வரவிலக்கனம் என்ன சிறிதரன் பாப்பா?
இனத்தை விற்று சீவிப்பது ஓர் அறிவாளி கல்விமான் செய்யும் வேலையா?
தயவு செய்து உங்களை கெஞ்சி கேட்கிறோம், எதிர்காலத்தில் தேசிய தலைவர் கூறியதாக பொய்யும் புரட்டையும் தேர்தல் மேடைகளில் தேசிய தலைவரை கொச்சைபடுத்து ரீதியில் தயவு செய்து கூறாதீர்கள்.
மக்களிற்கான உங்கள் சேவையை கூறி வாக்குகளை மக்களிடம் பெற்று கொள்வதே ஓர் நேர்மையான மனிதன் செய்யும் வேலை.



















