கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவரை கைதுசெய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியிடமிருந்து 10 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் சுற்றிவளைப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.