இலங்கையின் பாதாள உலகக்குழு ஒன்றிடம் இருந்து அதிகளவான துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரின் பாதாள உலகக்குழுவிற்குரிய இந்த துப்பாக்கிகள் ஹோமாகமை பிட்டிபன பிரதேசத்தில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைப்பற்றப்பட்டுள்ளது.
ககன என்ற இந்த போதைப் பொருள் கடத்தல்காரின் பாதாள உலகக்குழுவிடம் பெருந்தொகை துப்பாக்கிகள் அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனடிப்படையில் அதிரடிப்படையினர் இன்று காலை விசேட தேடுதலை நடத்தியிருந்தனர்.
இந்த தேடுதலின் போது குறித்த பாதாள உலகக்குழுவிற்கு சொந்தமானது என கருதப்படும் 12 ரீ56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிகளுடன் ககன என்ற சந்தேக நபரின் சகாவும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பாதாள உலகக்குழு ஒன்றிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















