கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 பொலிசார் இன்று (2) குற்றவியல் விசாரணை பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் வர்த்தக வலையமைப்புடன் தொடர்பை பேணியவர்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று கைதானவர்களில் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்குகின்றனர்.
கடந்த 29ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 4 பொலிசார் கைது செய்யப்பட்டனர். ஒரு பொதுமகனும் கைது செய்யப்பட்டிருந்தார். இதுவரை பொலிஸ் பொதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 16 பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பெருமளவான பொலிசார் கைதானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















