பிக்பாஸ் புகழ் வனிதாவுக்கு பீட்டர் பால் என்பவருடன் ஜூன் 27 ஆம் திகதி நடைபெற்றது திருமணம் இல்லை. நிச்சயதார்த்தம் மாதிரி ஒரு விஷயம் தான் என்று வனிதாவின் வக்கீல் விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பீட்டர் பாலின் மீது அவரது முன்னாள் மனைவி தனது கணவர் விவகாரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து வனிதாவின் வக்கீல் கருத்து வெளியிட்டுள்ளார்.
அப்போது பீட்டர் பால் மற்றும் வனிதா ஆகியோருக்கிடையே நடைபெற்றது திருமணம் இல்லையென்றும், ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்றது நிச்சயதார்த்தம் மாதிரி ஒரு விஷயம் தான் என்றும் விளக்கமளித்தார்.
பீட்டர் பால் மேல் குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டியது வனிதா தான். முதல் கல்யாணத்தை மறைத்து என்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றச்சாட்டு தெரிவித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.
ஏனெனில் பீட்டர்பால் மீது வனிதா நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் பீட்டர் பால் சொன்னது உண்மை.
அவரது முன்னாள் மனைவியிடம் இருந்து 7 ஆண்டுகளாக பிரிந்திருக்கிறார். அவர்களுக்குள் விவாகரத்து நடைபெறவேண்டும். அதன் பிறகே இருவருக்கும் சட்டப்படி திருமணம் நடைபெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.