ஆண் மலட்டுத்தன்மை என்பது இன்றைய நிலையில் தம்பதிகளுக்குள் மிகவும் பரவலான பிரச்சனையாக உள்ளது. இது ஆண்களுக்கு ஏற்படுகின்ற விந்தணு குறைபாடு காரணமாகவே அமைகிறது
வயது முதிர்ச்சி, உளவியல் ரீதியிலான மன அழுத்தம், ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, அதிகப்படியான விதை பை சூடு, கைபேசி மற்றும் கணிணி பயன்பாடு போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
அதுமட்டுமின்றி ஜங்க் உணவுகள் மற்றும் இதர ஆரோக்கியத்தை பாழாக்கும் உணவுகளில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதனால் இந்த உணவுகள் கருவளத்தை பாதிப்பதோடு, உடல் எடையை அதிகரித்து, வேறு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.
அந்தவகையில் ஆண்களின் கருவளத்தைப் பாதித்து, மலட்டுத்தன்மையை உண்டாக்கக்கூடிய சில உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டால் இதுபோன்ற பிரச்சினையிலிருந்து விடுபடலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
- கார்போனேட்டட் பானங்களைத் தவறாமல் குடிப்பது மோசமான விந்தணு இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அடிக்கடி சோடா பானங்களை வாங்கிக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும்.
- நீங்கள் ஆல்கஹால் எந்த அளவிற்கு குடிக்கிறீர்களோ, அந்த அளவில் விந்தணுக்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்படும். மிதமான அளவில் மது அருந்தினால் கூட அது விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக கூறுகின்றன.
- பால் பொருட்களால் உடலுக்குத் தேவையான புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம். ஆனால் கொழுப்பு அதிகம் நிறைந்த பால் பொருட்களான சீஸ் மற்றும் அதிக கொழுப்புள்ள பாலைத் தவிர்க்க வேண்டும்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்
- வாழைப்பழங்கள் ஆண்களின் பாலுணர்ச்சியை மேம்படுத்துகின்றன மற்றும் பாலியல் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகின்றன. அதோடு அதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி1 நிறைந்திருப்பதால், அவை ஆண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கும்.
- ப்ராக்கோலி ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு இதில் கேரட், பசலைக்கீரை, ஆப்ரிகாட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைப் போல் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.
- வால்நட்ஸில் விந்தணுக்களைப் பெற தேவையாக முக்கியமான ஊட்டச்சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. எனவே ஆண்கள் தினமும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பு பகுதிகளில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, ஆண்களின் கருவளம் அதிகரிக்கும்.
- பூண்டு ஆண்களின் கருவளத்தில் மாயங்களை ஏற்படுத்த வல்ல ஒரு சிறப்பான உணவுப் பொருள். பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் செலினியம், விந்தணுக்கள் பாதிப்படைவதில் இருந்து பாதுகாக்கும் மற்றும் அதன் தரத்தை அதிகரிக்கும்.
- டார்க் சாக்லேட் ஆண்களின் கருவளத்திற்கு நன்மையளிக்கக்கூடியது. இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். ஆனால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகளுக்கு மேல் டார்க் சாக்லேட் சாப்பிடக்கூடாது.