இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 2076ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தகவல்படி இன்றைய தினம் பஹ்ரெய்னில் இருந்து வந்த இருவர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.
வைத்தியசாலை தரப்பு தகவல்களின்படி 162பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை 1903பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு ஜிந்துப்பிட்டியில் ஜூலை 2ம் திகதியன்று கொரோனா தொற்றாளியாக கண்டுபிடிக்கப்பட்டவருக்கு தற்போது அந்த தொற்று இல்லை என்று பீசீஆர் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அவருக்கு தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட ஏனையோருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட 154பேரும் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.