பேருந்தில் சத்தமாக ஒலி எழுப்பிக்கொண்டிருந்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த சாரதி செயற்பட்டுள்ளார்.
காலி பொது பேருந்து நிலையத்தில் உள்ள பொலிஸ் பொறுப்பதிகாரியினால் குறித்த சாரதி கைது செய்யப்பட்டு காலி காவல்நிலைய போக்குவரத்து பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த பேருந்தையும் காலி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இலகுரக வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை மாத்திரமே வைத்துள்ளதாக காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



















