இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன், 38 பேர் குணமடைந்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர், எதியோப்பியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த ஒருவர், சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் ஆகியோரே நேற்று அடையாளம் காணப்பட்டவர்களாவர்.



















