தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனரும், அதன் தேசிய அமைப்பாளருமான பெஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
‘மிகவும் பழைமைவாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று இரண்டாகப் பிளவடைந்துள்ளது. ஜே.வி.பியும் பின்னடைவை சந்தித்துள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சற்று சரிசையும் பிளவையும் சந்தித்துள்ளதாக கூறிய அவர், அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே பிளவுநிலை காணப்படுவதாகவே அறிகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எவ்வாறாயினும் வெற்றிகளைப் போல தோல்விகளையும் கட்சியின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். இல்லாவிட்டால் இப்படி பிளவுநிலைகளே ஏற்படும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.