மக்கள் இருமல் அல்லது தும்மும்போது வெளிப்படும் நீர்த்துளிகள் வழியாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்று பல மாதங்களாக வலியுறுத்தி வந்த உலக சுகாதார அமைப்பு தற்போது முக்கிய தகவல் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது.
காற்றில் நீடிக்காத, ஆனால் பரப்புகளில் விழும் நீர்த்துளிகளால் கொரோனா பரவும் என்பதால் தான் கை கழுவுதல் ஒரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் இதற்கு உடன்படவில்லை, வைரஸ் காற்றிலும் பரவக்கூடும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மக்கள் பேசியபின்னர் அல்லது சுவாசித்தபின் மணிநேரங்களுக்கு காற்றில் மிதக்கும் பல துகள்களின் மூலம் கொரோனா பரவக்கூடும் என வலியுறுத்தியுள்ளனர்.
மூடப்பட்ட மற்றும் நெரிசலான இடங்கள் போன்ற குறிப்பிட்ட அமைப்புகளில் இது சாத்தியமானது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக இப்போது உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
அந்த ஆதாரங்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும், ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டால், வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுப்பது என்பதற்கான ஆலோசனைகள் மாற வேண்டியிருக்கலாம்.
மேலும் முகக்கவசங்கள் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு வழிவகுக்கும், மேலும் குறிப்பாக பார்கள், உணவகங்களில், மற்றும் பொது போக்குவரத்தில் கடுமையான சமூக இடைவெளி அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.