பலாங்கொடை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை, ராவணாகந்த, வலகொட பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் , இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 24 வயதான இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவி உயர்தரம் கற்பதற்காக வேறு பாடசாலையில் இணைவதற்கு ஆயத்தமாகி இருந்தமையினால் தைப்பதற்காக கொடுத்திருந்த புதிய சீருடையை பெற்றுக் கொள்ள கடந்த 5 ஆம்திகதி தையல் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
எனினும், அவர் வீடு திரும்பியிருக்காத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த யுவதியின் உறவினர்கள், கடந்த 6 ஆம் திகதி மேற்படி இளைஞரின் வீட்டில் மயமடைந்திருந்த நிலையில் யுவதியை கண்டுபிடித்திருந்தனர்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியை பாலியல் வன்புணர்வு உள்ளாக்கியிருக்கலாம் என்ற சந்தேகநபரை கைது செய்யதுள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



















