ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை கண்டிக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
இதன்படி, பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, காலை 10 மணி முதல் கண்டி மாவட்டத்தில் இடம்பெறும் பல பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகின்றது.



















