பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை ஆகும்.
வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன.
வேப்பிலை ஒரு சிறந்த கிருமி நாசனி. பல சரும பிரச்சினைகளை அடியோடு அழிக்க வல்லது.
தினமும் வேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- ரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கி சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.
- இதில் இருக்கும் பக்டீரியா போன்ற கிருமி நாசினி குணம் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், நோய் தொற்று, முகப் பரு போன்ற அனைத்துச் சரும பிரச்னைக்கும் உகந்தது.
- இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
- முடி வளர்ச்சிக்குக் காரணமான உயிரணுக்களைத் தூண்டிவிட்டு கூந்தல் அடர்த்தியையும் அதிகரிக்கும்.
- பார்வை திறனை பன்மடங்கு அதிகரிக்கும்.
வேப்பிலையின் பயன்கள்
- வேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். வேப்பிலையில் இருக்கும் புஞ்சை தடுப்பு குணம் இதனால் ஏற்படும் பொடுகு, பெண் போன்றவை அழித்து உங்கள் தலையின் மேற் பகுதியை பாதுகாக்கும்.
- கண்களில் எரிச்சல், சிவந்த கண்கள் அல்லது தூக்கமின்மை காரணமாகச் சோர்ந்த கண்கள் போன்ற எந்த பிரச்னை இருந்தாலும் சில வேப்பிலைகளை நீரில் கொதிக்க வைத்து அது ஆரிய பின்பு அந்த நீரில் கண்களை கழுவினால் போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- தினமும் வேப்பிலை சாப்பிடுவதால் அது குடலில் இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகளை அழித்து வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். அதுமட்டுமின்றி கல்லீரலின் ஆரோக்கிய அதிகரித்தால் இயல்பாகவே செரிமானமும் அதிகரிக்க செய்கின்றது.
- தினமும் வேப்பிலையை வாயில் போட்டு மெல்வதனால் பற்களில் இருக்கும் கிருமிகளை கொன்று பற்களின் ஈற்களை வலுப்படுத்தும். மேலும் வேப்பிலையை மெல்வதால் பற்களின் பளபளப்பும் அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது 4-வது, 5-வது மாதங்களில் வேப்பிலையை சாப்பிடக் கூடாது, ஏனென்றால் வேப்பிலை நமது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும், இது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.