இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் எழுதியுள்ள கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தின் கவர்தரனா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா. இவர் அங்கன்வாடி ஊழியராக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை நிஷா சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து உயிருக்கு போராடிய அவர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்னர் நிஷா கைப்பட எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். கடிதத்தில் பல்வேறு அதிர்ச்சி விடயங்களை நிஷா எழுதியிருந்தார்.
அதில், அப்பா, நான் பெரிய சிக்கலில் இருக்கிறேன், என்னால் அதை சொல்ல கூட முடியவில்லை. என் முகத்தை வெளியில் காட்டவோ அல்லது மறைக்கவோ கூட முடியவில்லை.
அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன். என் மரணத்துக்கு அனுப் என்பவர் தான் காரணம்.
அவர் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என எழுதப்பட்டுள்ளது. இது குறித்த பொலிசார் விசாரணையில் அனூப்பிடம் நிஷா 41 ஆயிரம் பணம் கடனாக வாங்கினார்.
பணத்தை திருப்பி தர முடியாததால் தன்னுடன் தொடர்பு வைத்து கொள்ள அனுப் நிஷாவை கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும் சில வீடியோக்களை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்தே நிஷா தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.