பரீட்சை திணைக்களத்தின் ஒருநாள் மற்றும் வழமையான சேவை பிரிவுகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவித்தலை பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாடசாலைகள் கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ள நிலையில், இன்று பரீட்சைத் திணைக்களமும் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.